Friday, February 24, 2012

கூடங்குளம்-மக்களின் எழுச்சி வெல்லுமா?

அமைதியாய்  காந்திய வழியில் போராடிவரும் கூடங்குளம் மக்களை பார்த்தால் மனதிற்கு நிறைவாக உள்ளது.எந்த விதமான பின்புலமும் இல்லாமல் யாருடைய தூண்டுதலும் இல்லாமல் தம் வாழ்க்கையும்,தன் சந்ததிகளின் வாழ்க்கையையும் பாதுகாக்க அவர்கள் போராடும் போராட்டத்தை சில ஊடகங்களும்,அதிகார அமைப்புகளும் கொச்சை படுத்துவதை பார்த்தால் சிரிப்பதா,அழுவதா  என்றே தெரியவில்லை.

அணு உலையை எப்படியாவது திறந்து விட வேண்டும் என்பதற்காக இவர்கள் போடும் நாடகத்திற்கு அளவே இல்லை.உதய குமாரை தேசத்துரோகி என்கிறார்கள்.அணுஉலைக்கு எதிராக பிரச்சாரம் செய்தால் அவர்களை ஊர் மக்களே அடித்து விரட்டிகிரார்கள் என்று முதல் பக்கத்தில் செய்தி போட்டு மக்களை தூண்டி விடுகிறார்கள்.வெளிநாட்டு பணம் வருகிறது என்று சொல்லாத காங்கிரசு தலைவர்களே இல்லை.இவர்கள் அணு உலைக்கு எதிராக உண்ணாநிலை இருந்தால்,அவர்கள் அளவுக்கு மீறி உண்ணும் போராட்டத்தை நடத்துகிறார்கள்.




அணு உலையை திறந்து விட வேண்டும் என்பதற்காக தமிழக மக்களை எவ்வளவு கொடுமை படுத்த முடியுமோ அவ்வளவு கொடுமையை மின்சாரத்தை தடை செய்து செய்கிறார்கள்.தினமும் பன்னிரண்டு மணிநேரம் மின்சாரத்தை தடை செய்து சிறு தொழில்,வணிகம் மக்களின் அன்றாட பணிகள் முதலியவற்றை கெடுப்பதோடு தமிழகத்திற்கு அணு மின்சாரத்தை விட்டால் வேறு வழியே இல்லை என்பதைப்போல ஒரு போலியான தோற்றத்தை உருவாக்கிறார்கள்.ஆந்திரா,கர்நாடகா போன்ற மாநிலங்களில் மின்தடை ஒரு சில மணி நேரங்களே,ஆனால் தமிழகத்தில் குறிப்பாக திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று புறங்களில் பன்னிரண்டு மணிக்கு மேல் மின்சாரத்தை தடை செய்து மக்களை இம்சித்து தயவு செய்து அணுஉலையை திறங்கள்  என்று மக்களை கதற வைத்து அணு  உலையை திறந்து விடலாம் என்று மத்தியஅரசும்,மாநில அரசும் திட்டம் போடுகிறது.




ஐயா,மத்திய ,மாநில அரசுகளே நீங்கள் என்னதான் திட்டம் போட்டாலும் பயங்கரமான விழிப்புணர்வு உள்ள திருநெல்வேலி மக்களின் மனதில் சிறு சலனத்தை கூட ஏற்ப்படுத்த முடியாது என்பதை அறிவீர்களா?மக்களின் எதிர்ப்பை மீறி நீங்கள்  வன்முறையின் மூலம் சாதித்து விடலாம் என்று நினைத்தால் பாவம் ஏமாற போவது நீங்கள்தான்.ஏனன்றால் நாம் சுதந்திரம் வாங்கியதே அகிம்சை முறையில்தான்.அவர்கள் போராடுவதும் அம்முறையிலே.


நண்பர்களே பதிவை படித்து கருத்து தரவும்.